அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

வரலாறு[தொகு]

காலஞ்சென்ற சி. என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம். ஜி. ஆர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து எம். ஜி. ஆரால் 1972ல் தொடங்கப்பட்ட இயக்கமே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இக்கட்சி பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

எம். ஜி. ஆர். காலம்[தொகு]

அ. தி. மு. க கட்சியின் நிறுவனரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் பிரச்சாரம் செய்யும் படம்
எம்.ஜி.ஆரால் 1972ல் தொடங்கப்பட்ட அ. தி. மு. க தனது முதல் தேர்தலை 1973-ல் திண்டுக்கல்பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது சந்தித்தது. இத்தேர்தலில் அ. தி. மு. க வேட்பாளர் மிக அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[1] அதைத் தொடர்ந்து 1977-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)அனைத்திந்திய பார்வார்டு பிளாக்,இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுப் பெரும்பாலான இடங்களில் வெற்றி கண்டது.[2] நான்முனைப் போட்டியில் தி.மு.க. மொத்தமிருந்த 234 இடங்களில் வெறும் 48 இடங்களை மட்டுமே பெற்றது.
எம்.ஜி.ஆர்-ஐ தொடர்ந்து என். டி. ராமராவ் ஆந்திராவில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பிரசாரத்திற்கே செல்லாமல் ஒரு தேர்தலில் எம். ஜி. ஆர் வெற்றிப்பெற்றார்.

கொடியின் வரலாறு[தொகு]

எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கப் போவதாக செய்தியை அறிந்த எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தாமரை படமிட்ட கொடியை கட்சி கொடியாக தங்கள் வீடுகளிலும், குடிசைகளிலும் ஏற்றினார்கள். அதன் பிறகு எம்.ஜி.ஆர், அண்ணாவின் புகைப்படங்களை ஆய்வு செய்து அதில் சிறப்பாக இருந்த அண்ணாவின் படமொன்றினை தேர்வு செய்தார். அதில் அண்ணா ஆணையிடுவதைப் போல தோற்றமளிப்பார். இந்த படத்தினை அண்ணா தோற்றுவித்த தி.மு.கவின் சிகப்பு கருப்பு கொடியோடு இணைத்து அண்ணா தி.மு.கவின் தற்போதைய கொடியமைப்பினை எம்.ஜி.ஆர் உருவாக்கினார்.

பெயர் மாற்றம்[தொகு]

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று எம்.ஜி.ஆர் மாற்றினார். இதற்கு கட்சிக்குள் சிலர் ஏற்கவில்லை என்றாலும், பின் எம்.ஜி.ஆர் பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தப் பின் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு எழுந்த சர்ச்சை[தொகு]

பொதுக்கூட்டம் ஒன்றில் கருணாநிதி, எம்ஜிஆருடன் ஜெயலலிதா
தமிழக முதல்வராக இருந்த எம். ஜி. ராமச்சந்திரன் டிசம்பர் 24, 1987 அன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின் யார் முதல்வராவது என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சர்ச்சை எழுந்தது. ஆர். எம். வீரப்பனின் ஆதரவுடன் எம்ஜியாரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வரானார். ஆனால் அதை கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜெ. ஜெயலலிதா ஏற்கவில்லை. 132 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்ட அதிமுகவில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர், மற்றவர்கள் ஜானகியை ஆதரித்தனர். எட்டாவது சட்டமன்றத்தின் பேரவைத் தலைவர் பி. எச். பாண்டியனும் ஜானகியை ஆதரித்தார்.
புதிய அரசின் மீது ஜனவரி 26, 1988 இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. திமுக, இந்திரா காங்கிரசு உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களுக்கும் ஜானகி ஆதரவு உறுப்பினர்களுக்கும் இடையே சட்டமன்றத்தில சச்சரவு ஏற்பட்டது. அவைத் தலைவர் ஜெயலலிதா தரப்பு உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றி, வெறும் 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். ஜானகி ராமச்சந்திரன் அதில் வெற்றி பெற்றார். ஜனவரி 21, 1989 இல் 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 69.69 % வாக்குகள் பதிவாகின. மருங்காபுரி மற்றும் மதுரை கிழக்கு ஆகிய இரு தொகுதிகளுக்கு நிர்வாக காரணங்களால் தேர்தல் நடைபெறவில்லை; இருமாதங்கள் கழித்து மார்ச் 11 ஆம் நாள் நடைபெற்றது. இதற்குள் அதிமுக கட்சி ஒண்றிணைந்து விட்டதால், மீண்டும் அதற்கு “இரட்டை இலை” சின்னம் ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான அக்கட்சியே இரு தொகுதிகளிலும் வென்றது.[3]

அ.தி.மு.க வின் வெற்றி,தோல்விகள்.[தொகு]

எம்.ஜி.ஆர்க்கு பின் திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் மாறி மாறிதான் ஆட்சிசெய்துகொண்டு வருகின்றன.
வரிசை எண்பெயர்தொடக்கம்முடிவுமுறைகட்சி
1எம். ஜி. இராமச்சந்திரன்30 ஜூன்197717 பிப்ரவரி19801அ.இ.அ.தி.மு.க.
2எம். ஜி. இராமச்சந்திரன்9 ஜூன்198015 நவம்பர்19842அ.இ.அ.தி.மு.க.
3எம். ஜி. இராமச்சந்திரன்10 பிப்ரவரி198524 டிசம்பர்19873அ.இ.அ.தி.மு.க.
4இரா. நெடுஞ்செழியன்24 டிசம்பர்19877 ஜனவரி19881அ.இ.அ.தி.மு.க.
5ஜானகி இராமச்சந்திரன்7 ஜனவரி198830 ஜனவரி19881அ.இ.அ.தி.மு.க.
6ஜெ. ஜெயலலிதா24 ஜூன்199112 மே19961அ.இ.அ.தி.மு.க.
7ஜெ. ஜெயலலிதா[4]14 மே200121 செப்டம்பர்20012அ.இ.அ.தி.மு.க.
8ஓ. பன்னீர்செல்வம்21 செப்டம்பர்20011 மார்ச்சு20021அ.இ.அ.தி.மு.க.
9ஜெ. ஜெயலலிதா2 மார்ச்சு200212 மே20063[4]அ.இ.அ.தி.மு.க.
10ஜெ. ஜெயலலிதா16 மே2011-4[4]அ.இ.அ.தி.மு.க.

15ஆவது மக்களவை[தொகு]

15ஆவது மக்களவைக்கு அதிமுக 23 தொகுதிகளில் போட்டியிட்டு பின்வரும் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது.[5]
  1. திருவள்ளூர் (தனி)
  2. தென்சென்னை
  3. விழுப்புரம் (தனி)
  4. சேலம்
  5. திருப்பூர்
  6. பொள்ளாச்சி
  7. கரூர்
  8. திருச்சி
  9. மயிலாடுதுறை

16ஆவது மக்களவை[தொகு]

16ஆவது மக்களவைக்கு அதிமுக 39 தொகுதிகளில் போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்று மக்களவையின் 3ஆவது பெரிய கட்சியாகியது. இது தமிழக தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை எந்த ஒரு கட்சியும் பெறாத ஒரு சாதனையாகும்[6].

தமிழ்நாடு வேட்பாளர்கள் பட்டியல், வெற்றிபெற்ற வாக்குகள்[தொகு]

மக்களவை[தொகு]

வருடம்பொதுத்தேர்தல்கிடைத்த வாக்குகள்வெற்றிபெற்ற தொகுதிகள்வேட்பாளர் பட்டியல்
19776ஆவது மக்களவை5,365,07617
19807ஆவது மக்களவை4,674,0642
19848ஆவது மக்களவை3,968,96712
19899ஆவது மக்களவை4,518,64911
199110ஆவது மக்களவை4,470,54211
199611ஆவது மக்களவை2,130,2860
199812ஆவது மக்களவை6,628,92818
199913ஆவது மக்களவை6,992,00310
200414ஆவது மக்களவை8,547,0140
200915ஆவது மக்களவை6,953,5919
201416ஆவது மக்களவை17,983,16837

சட்டசபை[தொகு]

வருடம்பொதுத்தேர்தல்கிடைத்த வாக்குகள்வெற்றிபெற்ற தொகுதிகள்வேட்பாளர் பட்டியல்
19776வது சட்டசபை5,194,876131[1]
19807வது சட்டசபை7,303,010129[2]
19848வது சட்டசபை8,030,809134pdf
19899வது சட்டசபை148,6302pdf
199110வது சட்டசபை10,940,966164pdf
199611வது சட்டசபை5,831,3834pdf
200112வது சட்டசபை8,815,387132pdf
200613வது சட்டசபை10,768,55961pdf
201114வது சட்டசபை1,41,49,681151

புதுச்சேரி[தொகு]


வருடம்பொதுத்தேர்தல்கிடைத்த வாக்குகள்வெற்றிபெற்ற தொகுதிகள்
19743வது சட்டசபை60,81212
19774வது சட்டசபை69,87314
19776வது மக்களவை115,3021
19805வது சட்டசபை45,6230
19856வது சட்டசபை47,5216
19907வது சட்டசபை76,3371
19918வது சட்டசபை67,7926
19969வது சட்டசபை57,6783
199812வது மக்களவை102,6220
200110வது சட்டசபை59,9263
200611வது சட்டசபை3
201112வது சட்டசபை5